Search
Sunday 21 October 2018
  • :
  • :

‘காற்றின் மொழி’ படத்துக்கு கட்டையை போட்ட ஹீரோக்கள்

‘காற்றின் மொழி’ படத்துக்கு கட்டையை போட்ட ஹீரோக்கள்

‘போஃப்டா’ தனஞ்சயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாக நடித்துவருவது தெரிந்த விஷயம்.

அவருக்கு ஜேழடியாக விதார்த் நடிக்கும் இந்தப்படத்தில் மற்ற முக்கிய கேரக்டர்களில், லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர்.

‘துமாரி சுலு’ ஹிந்தி படத்தின் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று சில வாரங்களுக்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஆயுதபூஜை அன்று தனுஷின் ‘வட சென்னை, விஷாலின் ‘சண்டக்கோழி, ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்காரணமாக இப்போது ‘காற்றின் மொழி’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படத்தின் ரிலீஸை நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்திருப்பதோடு, புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் அதாவது நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் ‘சர்கார்’ படம் வெளியாக இருக்கிறது.

நவம்பர் மாதத்திலேயே 2.0 படமும் வெளியாகிறது.

இந்த சூழ்நிலையில் நவம்பர் மாதத்தில் ‘காற்றின் மொழி’ எந்த வாரம் வெளியாகும் என்று தெரியவில்லை!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better