Search
Tuesday 24 April 2018
  • :
  • :

கதாநாயகியுடன் தோழராகப் பழகிய கதாநாயகன்

கதாநாயகியுடன் தோழராகப் பழகிய கதாநாயகன்

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படம் ‘படைவீரன்’.

சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் கமர்ஷியலாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

என்றாலும் அப்படத்தின் கதாநாயகியான அம்ரிதாவுக்கு நல்ல பெயரைத்தேடிக்கொடுத்தது.

படைவீரன் படத்திற்கு முன் சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருந்தார்.

அதைப் பார்த்துவிட்டுத்தான் அவரை அழைத்து காளி படத்தின் கதாநாயகி வாய்ப்பு வழங்கினாராம் விஜய் ஆண்டனி.

விரைவில் வெளிவரவிருக்கும் ‘காளி’ படம் தன் சினிமா பயணத்தை வேகப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் அம்ரிதா.

அது மட்டுமல்ல, காளி படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி என்னிடம் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார் என்கிறார் அம்ரிதா.

‘காளி’ படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி ஒரு பெண் இயக்குநர் என்பதால் படத்தில் வேலை பார்த்தபோது பாதுகாப்பாக இருந்ததாகவும் சொல்கிறார்.

சிம்ரன், த்ரிஷா இருவரும் அம்ரிதாவுக்கு ரோல் மாடல்களாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better