Search
Thursday 18 October 2018
  • :
  • :

கபாலி படத்தில் நடிக்க மறுத்த ரஜினி…

கபாலி படத்தில் நடிக்க மறுத்த ரஜினி…

சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற ‘காலா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சை அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்தனர்.

அதாவது அரசியல்கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தனர்.

அதற்கு மாறாக சினிமாவை மட்டுமே பேசினார் ரஜினி.

காலா விழாவில் ரஜினி பேசிய நீண்ட உரையிலிருந்து…

‘‘இது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரியே தெரியவில்லை.

படத்தின் வெற்றிவிழா மாதிரி தான் தெரிகிறது.

நான் ‘சிவாஜி’ படத்தின் வெற்றி விழாவில்தான் கடைசியாக கலந்து கொண்டேன்.

அதன் பிறகு ‘எந்திரன்’ படத்தின் வெற்றிவிழாவை கொண்டாட நினைக்கும்போது எனக்கு உடல் நலம் சரியில்லாமல்போய் விட்டது.

சிங்கப்பூர் சென்ற நான் உங்களின் வேண்டுதலால மீண்டு வந்தேன்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெறும்போது டாக்டர்கள் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதும் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினார்கள்.

எனக்கு தெரிந்தது நடிப்புதான்! அதனால் ‘ராணா’ படத்தில் ஏழெட்டு நாட்கள் நடித்தேன். பிறகு எனக்கு உடல்நலம் இல்லாமல் போனது. படம் கைவிடப்பட்டு அந்த கதையை சிறிது மாற்றி ‘கோச்சடையான்’ படமாக என் மகள் சௌந்தர்யா இயக்க முடிவானது. ‘கோச்சடையானு’ம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை!

அதன் பிறகு கே.எஸ்.ரவிகுமாரை கூப்பிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றேன். ‘லிங்கா’ கதை எனக்கு பிடித்திருந்தது. 65 வயதான நான் 35 வயது ஹீரோ மாதிரி, 45 வயதுக்காரனா ஹீரோவாக நடிக்கலாம, ஆனால் என் மகள் வயதுடைய சோனாக்‌ஷி சின்ஹாவுடன் டூயட் பாடி நடித்தது சரியில்லை. அதனால் இனிமேல் இது மாதிரி வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

‘லிங்கா’ கதை கேட்டதும் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம், தண்ணீர் பஞ்சம், நதி என்று சொன்னாலே என்னை அறியாமல் அதில் ஈடுபாடு வந்து விடும்.

நதிகள் இணைப்பு என்பது என் வாழ்க்கையில் இணைந்த ஒன்று!

என் வாழ்க்கையின் கனவு தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான்!

லிங்கா படமும் நினைத்த அளவுக்கு போகவில்லை. அந்த படத்தின் மூலம் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். நல்லவனாக இருக்கணும். ஆனா ரொம்பவும் நல்லவனாக இருக்க கூடாது என்று! ரொம்ப நல்லவனாக இருந்தால் ஆபத்து! கோழைன்னு நினைத்து விடுவார்கள். லிங்கா ஓடவில்லை என்றதும் ரஜினி கதை முடிந்து விட்டது என்றார்கள்! இதைதான் 40 வருடமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை ஓட வச்சிருக்கீங்க, ஆண்டவன் ஓட வைத்துள்ளான்!

அதற்கு பிறகு என் மகள் சௌந்தர்யா இயக்குநர் பா. ரஞ்சித் பற்றி சொல்லி அவரிடம் கதை கேட்க சொன்னார். டான் கதை வேண்டாம் என்று அதில் நடிக்க மறுத்தேன். ஆனால் மலேசியா பின்னணி கதை என்று ரஞ்சித் கதையை விளக்கி சொன்னதும் ‘கபாலி’யில் நடிக்க சம்மதித்தேன்.

நான் இத்தனை வருடம் நடித்ததில் 2 வில்லன்களை பார்த்திருக்கிறேன்.

‘பாட்ஷா’வில் ஆண்டனி (ரகுவரன்), ‘படையப்பா’வில் நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்). அதன் தொடர்ச்சியாக இப்போது ‘காலா’வில் ஹரிதாதா ( நானா படேகர்). இந்த படம் (காலா) அருமையான படமாக இருக்கும். வெற்றி அடையும். ‘காலா’ அரசியல் படம் அல்ல! ஆனால் படத்தில் அரசியலும் இருக்கு’’ என்றார் ரஜினி!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better