Search
Friday 22 February 2019
  • :
  • :

பாக்யராஜூக்கு புதிய பிரச்சனை

பாக்யராஜூக்கு புதிய பிரச்சனை

விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தின் கதை பல வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய செங்கோல் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு வருண் என்கிற ராஜேந்திரன் சர்ச்சையை கிளப்பினார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது.

சர்கார் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்ட நிலையில் சமரசம் மேற்கொள்ளப்பட்டது.

வருண் ராஜேந்திரன் பெயரை சர்கார் படத்தின் டைட்டிலில் போட ஏ ஆர் முருகதாஸ் ஒப்புக்கொண்டார்.

வருண் ராஜேந்திரன் கேட்ட 30 லட்சத்தை கொடுக்க அவர் சம்மதித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் திரையுலகில் தற்போது புதிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறது.

பல வெற்றி பெற்ற படங்களின் கதைகளை என்னுடைய கதை என்று உரிமை கோரி பலரும் கிளம்பி இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் கதை என்னுடைய கதை என்று வெற்றி மகாலிங்கம் என்ற இயக்குனர் உரிமை கொண்டாடி பிரச்சனையைக் கிளப்பி வருகிறார்.

அந்த இயக்குனர் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.

அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஒன்றிரண்டு நாட்கள் கூட தியேட்டரில் ஓடவில்லை.

வெற்றி பெற்ற படத்தின் மீது குற்றம் சுமத்துவதன் மூலம் தனக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தற்போது சுப்பிரமணியபுரம் படத்தின் மீது உரிமை கொண்டாடி சர்ச்சையை கிளப்பி வருகிறார் என்று படத்துறையில் வெற்றி மகாலிங்கம் பற்றி குற்றம்சாட்டுகிறார்கள்.

இவரைப்போலவே வேறு சிலரும் வெற்றி பெற்ற பல படங்களின் கதைகள் மீது உரிமை கொண்டாடி பிரச்சனைகளை தொடங்கியிருக்கிறார்கள்.

பாக்கியராஜ் நல்லது செய்யப்போய், இப்போது பூமராங் ஆகி அவர் பக்கமே திரும்பியுள்ளது.

பலரும் பாக்யராஜை அணுகி பஞ்சாயத்து செய்ய அழைக்க ஆரம்பித்தால் என்ன மாதிரி விளைவை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better