Search
Tuesday 17 July 2018
  • :
  • :

ஜோதிகாவும், சிம்புவும் நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் படம்

ஜோதிகாவும், சிம்புவும் நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் படம்

இதுவரை எத்தனையோ படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சிம்பு, இளம் நடிகர்களில் அதிகமான படங்களில் கெஸ்ட்ரோலில் நடித்த நடிகர் சிம்புதான் என்று சொல்லுமளவுக்கு, கோவா, காக்காமுட்டை, கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட பல படங்களில் கெஸ்ட்ரோலில் நடித்திருக்கிறார்.

இந்தப்பட்டியலில் இப்போது லேட்டஸ்ட் இணைப்பு… ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் ‘காற்றின் மொழி’ படம்.

இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் விதார்த், லட்சுமி மஞ்சு ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஒரேகட்டமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் சிம்பு.

ஏற்கெனவே ‘சரவணா’, ‘மன்மதன்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள சிம்புவும், ஜோதிகாவும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் நடித்துள்ளனர். ‘செக்கச் சிவந்த வானம்’ படப்பிடிப்பின்போது காற்றின் மொழி படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்கும்படி கேட்டிருக்கிறார் ஜோதிகா.

அவரது வேண்டுகோளை தட்டமுடியாமல்தான் ‘காற்றின் மொழி’ படத்தில் நடிக்க சம்மதம் சொன்னாராம்.

இந்தப்படத்தில் சிம்பு நடிப்பதன் மூலம் ஜோதிகாவும், சிம்புவும் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் என்ற பெருமை காற்றின் மொழி படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘தும்ஹரி சுலு’ படத்தின் ரீ-மேக்தான் ‘காற்றின் மொழி’.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better