Search
Sunday 16 December 2018
  • :
  • :

ஜோதிகாவை இயக்கும் புதுமுக இயக்குநர்

ஜோதிகாவை இயக்கும் புதுமுக இயக்குநர்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் ஒரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்குகிறார். இவர் திருடன் போலீஸ், உள்குத்து படங்களை இயக்கிய கார்த்திக் ராஜுவிடம் உதவியாளராக இருந்தவர். அதோடு, அனுஷ்கா நடித்த பாகமதி படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

அந்தப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தமிழில் வெளியிட்டது. அந்த அறிமுகத்தில்தான் ஜோதிகாவிடம் கதை சொல்லும் வாய்ப்பைப்பெற்றாராம்.

ரீ எண்ட்ரியில் புதுமுக இயக்குநர் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் இதுதான்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்குகிறது.

‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, படங்களை அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.

ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி காற்றின் மொழி வெளியாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better