Search
Tuesday 24 April 2018
  • :
  • :

பிக்பாஸ் ஜூலியின் அவசரபுத்தி…

பிக்பாஸ் ஜூலியின் அவசரபுத்தி…

கடந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அநியாயத்துக்கு அசிங்கப்பட்டார்.

போலியான பெண் என்ற இமேஜ் அவருக்கு ஏற்பட்டது. அதே நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலிக்கு மேலும் பிரபலத்தைத்தேடிக்கொடுத்தது.

பிக்பாஸ் முடிந்த பிறகு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையை செய்து வந்தார்.

அதே நேரம் ஜூலிக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் எண்ணமும் இருந்தது. சரியான வாய்ப்புக்காக காத்திருக்க மனசில்லாமல், ஊர்பேர் தெரியாத ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

‘தப்பாட்டம்’ உட்பட ஒரு சில லோபட்ஜெட் படங்களில் நடித்துள்ள துரை சுதாகர் என்பவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இதில் என்ன கொடுமை தெரியுமா? ஒரு படத்தில் கூட முழுசாக நடிக்கவில்லை. அதற்குள் தன்னுடைய கால்ஷீட்டை கவனிக்க மானேஜர் வைத்துக்கொண்டுவிட்டாராம்.

ஜூலியின் அவசரபுத்திக்கு அளவே இல்லை…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better