Search
Sunday 24 June 2018
  • :
  • :

‘பிக் பாஸ்’ வீட்டில் பத்திரிகையாளர்கள்…

‘பிக் பாஸ்’ வீட்டில் பத்திரிகையாளர்கள்…

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.

ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ, ரைஸா வில்சன், ஆரவ், என 19 பேர் போட்டியாளர்கள் எவ்வித வெளியுலகத் தொடர்பு இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியடைந்தது.

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூடுதல் அட்டென்ஷனும் கிடைத்தது.

கடந்த சில மாதங்களாகவே ‘பிக் பாஸ் 2’ விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் ஞாயிறு வரை அதாவது இரவு 9 மணி முதல் 10 மணி வரை ‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பாக இருக்கிறது.

கடந்த சீசனைப்போலவே இரண்டாவது சீஸனிலும் போட்டி துவங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை ஒரு நாள் தங்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better