Search
Sunday 20 May 2018
  • :
  • :

ஜீவா நடிப்பில் ஒரேநாளில் இரண்டு படம் வருமா?

ஜீவா நடிப்பில் ஒரேநாளில் இரண்டு படம் வருமா?

ஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது மிக அபூர்வமான விஷயம். கடந்த காலங்களில் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சம்பவம் சில தடவை நடந்துள்ளது.

அதன் பிறகு ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியிடக்கூடாது என்று கவுன்சில் கட்டுப்பாடு கொண்டு வந்தது.

இந்தநிலையில்,  ஜீவா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் உருவாகி இருக்கிறது!

சுந்தர்.சி.இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகலப்பு-2’  மைக்கேல் ராயப்பன் இயக்கத்தில் அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கீ’ ஆகிய படங்கள்தான் அவை.

இந்த இரண்டு படங்களும் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக இரண்டு தயாரிப்பாளர்களும் விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஏதாவது ஒரு படத்தை ஒரு வாரம் தள்ளி வெளியிடும்படி கவுன்சில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இரண்டு தயாரிப்பாளர்களும் உடன்படாமல் உள்ளனர்.

இந்த விஷயத்தில் தலையிட்டு சுமுகமான ஏற்பாட்டை செய்ய வேண்டிய ஜீவாவோ கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கேட்டால் கலகலப்பு-2 என் படம் அல்ல, ஜெய் நடித்த படம் என்கிறாராம்.

கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஒரே படம் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படம்தான். இந்த படம் படு தோல்வியடைந்தது.

எனவே, இந்த ஆண்டு துவக்கத்திலேயே தன்னுடைய நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவிருப்பது தனக்கு மார்க்கெட் ரீதியில் உதவும் என்பதால் வேடிக்கைப் பார்க்கிறாராம் ஜீவா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better