Search
Sunday 21 October 2018
  • :
  • :

ஜருகண்டி தயாரிப்பாளரை வெறுக்க வைத்த ஜெய்

ஜருகண்டி தயாரிப்பாளரை வெறுக்க வைத்த ஜெய்

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை- 600028 படத்தில் நடிகராக முகம் காட்டிய நித்தின் சத்யா ஜருகண்டி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார்.

நரகாசூரன் படத்துக்கு பைனான்ஸியராக உள்ளே வந்து பிறகு தயாரிப்பாளராக மாறிய பத்ரி கஸ்தூரி என்பவர்தான் ஜருகண்டி படத்துக்கும் பைனான்சியர்.

பிறகு அவரே தாயாரிப்பாளராக மாறி தற்போது நிதின் சத்யா உடன் இணைந்து ‘ஜருகண்டி’ படத்தை தயாரிக்கிறார்.

ஜெய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் முடிவடைந்து பல மாதங்களாகிவிட்டநிலையில் படத்தை வாங்குவதற்கு ஆளில்லை.

வெங்கட்பிரபுவின் உதவியாளரான ஏ.என்.பிச்சுமணி இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது.

படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் ‘ஜருகண்டி’ படத்துக்கு அனைவரும் பார்க்க கூடிய படத்திற்கான ‘U’ சர்டிஃபிக்கேட் வழங்கியுள்ளார்கள்.

இப்படத்தை இம்மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். வழக்கம்போல் படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்துவிட்டார் ஜெய்.

நண்பன் என்ற அடிப்படையில் அவரை அழைத்துப்பார்த்து வெறுத்துப்போய்விட்டாராம் நிதின் சத்யா.

இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எல்.பிரவீன் படத்தொகுக்கு செய்துள்ளார். போபோ சஷி இசை அமைத்துள்ளார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better