Search
Monday 10 December 2018
  • :
  • :

ஜெய் , அஞ்சலி நடிக்கும் புதிய படம் – பலூன்

ஜெய் , அஞ்சலி நடிக்கும் புதிய படம் – பலூன்

ஜெய் , அஞ்சலி நடிக்கும் புதிய படம் – பலூன்.

டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார், திலீப் சுப்பராயன் ஆகியோர்  தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்குனர் சினிஷ் என்ற புதிய இயக்குநர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், கபாலி படத்தின் மேல் இருக்கும் எல்லையற்ற ஆர்வத்தால், வரும் ஜூலை 22 ஆம் தேதி படப்பிடிப்புக்கு  விடுமுறை அளித்துள்ளனராம்.

“சிறு வயது முதலே, ரஜினி சாரின் படங்களை பார்த்து வளர்ந்த நாங்கள் அனைவரும்,  ஜூலை  22 ஆம் தேதியை ‘கபாலி’ தினமாகவே கொண்டாட முடிவு செய்துவிட்டோம்.

உலகமெங்கும் கபாலி படத்தின் வருகையை கொண்டாடி கொண்டிருக்க, நாங்களும் அதில் இணையப்போகிறாம்  என்பதை நினைக்கும்போது  பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்களின் கோரிக்கையை ஏற்று, எங்களுக்கு விடுமுறை அளித்த பலூன் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு, படக்குழுவினரின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நெருப்புடா…என்னும் முழக்கத்துடன் நாங்கள் ஆரவாரமாக ரஜினி சாரின் கபாலியை கொண்டாட போகிறோம்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் பலூன் படத்தின் இயக்குனரும், தீவிர ரஜினி ரசிகருமான  சினிஷ்.

உண்மையிலேயே கபாலி படம் பார்ப்பதற்காக படப்பிடிப்புக்கு மட்டம் போடுகிறார்களா? அல்லது ஜெய் கால்ஷீட் கொடுக்காமல் கவுந்தடிச்சு படுத்துக்கிட்டாரா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better