Search
Sunday 21 October 2018
  • :
  • :

ஜெய் நடிக்கும் படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார்

ஜெய் நடிக்கும் படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார்

வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படத்தில் நடித்தபோது, நடிகர் ஜெய்யும், நடிகர் நிதின் சத்யாவும் நண்பர்களானார்கள்.

அந்தப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது.

வெங்கட்பிரபுவின் பார்ட்டி பட்டாளத்தில் இருவருமே இருந்தாலும், இப்போது தனி டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகர் நிதின் சத்யா.

இதுவரை நடிகராக மட்டுமே இருந்த நிதின் சத்யா ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து தயாரித்தார்.

அந்தப் படம் வளரவில்லை.

இந்நிலையில் தன்னுடைய நிதித்தேவைக்காக தற்போது ஜெய்யை ஹீரோவாக்கி புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வருகிறார்.

‘ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்ஜியம்’ மலையாள படத்தின் நாயகியான ரெபா மோனிகா ஜான் இந்தப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

25% படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யத்திட்டமிட்டிருக்கிறாராம் நிதின் சத்யா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better