Search
Sunday 18 November 2018
  • :
  • :

விஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

விஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

சின்னத்திரை நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய திரையில் நல்ல அறிமுகமும், இடமும் கிடைக்க முக்கிய காரணம் விஜய்சேதுபதி.
உயர்திரு 420 உட்பட சில படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே தலைகாட்டி  இருந்தாலும் விஜய்சேதுபதிதான் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
அதன் பிறகு இடம்பொருள் ஏவல், தர்மதுரை படங்களிலும் வாய்ப்பு கொடுத்ததும் விஜய்சேதுபதிதான்.
இதற்கிடையில்,  அவரது நடிப்பில் ‘காக்கா முட்டை’ படம் வெளியானது.
அந்தப் படத்தில் கதையின் நாயகர்களான இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சேரிப்பெண் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பைப் பார்த்த பாலிவுட் இயக்குனர் அஷிம் அலுவாலியா, தான் இயக்கவிருக்கும் ‘டாடி’ படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யாவை அழைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டவர் ‘டாடி’ படத்தில் அர்ஜுன் ராம்பாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதுவரை எல்லாமுமாக இருந்தவர் விஜய்சேதுபதிதான்.
பாலிவுட் வாய்ப்பு கிடைத்த பிறகு விஜய்சேதுபதியின் விருப்பத்தைக் கூட அலட்சியப்படுத்திவிட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பாலிவுட்டுக்குப் போனால் தன் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என்பதாலோ என்னவோ அவரை டாடி படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னாராம் விஜய் சேதுபதி.
இது எனக்கு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி அதை மிஸ் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு.



Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better