Search
Saturday 22 September 2018
  • :
  • :

‘தானா சேர்ந்த கூட்டம்’ ஹிந்திப்பட ரீமேக்கா?

‘தானா சேர்ந்த கூட்டம்’  ஹிந்திப்பட ரீமேக்கா?

ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்-3’ படத்தில் நடித்து முடித்துவிட்டார் சூர்யா.

அந்தப் படத்துக்காக வைத்திருந்த போலீஸ் மீசையும் மாற்றி நார்மல் கெட்டப்புக்கு வந்துவிட்டார்.

எஸ்-3 படத்தை தொடர்ந்து  விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கிறார் சூர்யா.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் இது.

ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஸ்பெஷல்-26’ படத்தின் ரீ-மேக்தான் இந்தப்படம்  என்று சொல்லப்பட்டது.

இதை சூர்யாவும், விக்னேஷ்சிவனும் மறுத்தனர்!

இந்தப்படத்தின் பூஜை சிலவாரங்களுக்கு முன் சென்னையில் எளிமையாக நடந்தது.

தொடர்ந்து சில நாட்கள் மட்டும் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கடந்தவாரம் காரைக்குடியில்  துவங்கி நடைபெற்று வருகிறது.

காரைக்குடியிலிருந்து தெற்கே உள்ள ஊர்களில் தொடர்ந்து ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் .

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டநிலையில், இந்தப்படம் ‘ஸ்பெஷல்-26’ படத்தின் ரீமேக்போல் உள்ளதாக அந்தப்படத்தில் பணியாற்றுபவர்களே சொல்கின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better