‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டநிலையில் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.
எனவே அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் உறுதியாக இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார்.
இந்த எண்ணத்தினால், முதல் பாகத்திற்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து, அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.
முதல் பாகத்தில் இடம்பெற்றதை, இரண்டாம் பாகத்தில் அடல்ட் காட்சிகள் அதிகமாக இருக்குமாம்.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ – 2 படத்தை சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார்.
ஆனால் கௌதம் கார்த்திக் நடிக்க மறுத்துவிட்டாராம்.
கெளதம் கார்த்திக் படத்தில் விர்ஜினிட்டியை இழந்துவிட்டதால், அவரால் அடுத்த பாகத்தில் நடிக்க முடியாது.
எனவே, வேறொரு நடிகரை வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக சொல்லி வருகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
‘அடுத்த செட் விர்ஜின் பசங்களுடன் உங்களைச் சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது நான் உங்கள் சந்தோஷ் பி ஜெயக்குமார்’என ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை சுட்டிக்காட்டுகிறார்.