Search
Monday 25 June 2018
  • :
  • :

இருட்டு அறையில் முரட்டு குத்து வசூல்

இருட்டு அறையில் முரட்டு குத்து வசூல்

‘ஹரஹரமகாதேவகி’ படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, சாரா, கருணாகரன் முதலானோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ‘ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இளைஞர்களை குறிவைத்து ஆபாசமான காட்சிகள், ஆபாசமான வசனங்கள் என்று எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், இன்னொரு பக்கம் மிகப்பெரும் வசூல் கிடைத்துள்ளது.

22 நாட்களில், 3.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 5.25 கோடிக்கு ஒரு விநியோகஸ்தர் வாங்கினார்.

சில நாட்களிலேயே அந்த விநியோகஸ்தர் அதை 7 கோடிக்கு பிரித்து விற்றார்.

7 கோடிக்கு வாங்கியவர்களுக்கு பெரிய லாபம் கிடைத்துள்ளது.

முதல் 2 நாளில் 5 கோடியையும், 3 நாளில் 7 கோடியையும் வசூலித்துள்ளது இந்தப்படம்.

அதே நேரம் ஆபாசப்படம் என்பதால் தமிழ்நாடு தவிர வேறு எங்கும் இதுவரை வெளியாகவில்லை. மலேஷியா, துபாய் போன்ற பல நாடுகளில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தடை செய்துவிட்டனர்.

ஆனாலும் வெறும் தமிழ்நாடு தியேட்டரில் ரைட்ஸை விற்றவகையிலேயே தயாரிப்பாளருக்கு 1.5 கோடி லாபம் கிடைத்துவிட்டது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better