Search
Saturday 20 January 2018
  • :
  • :

இறுதிச்சுற்று படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு…!

இறுதிச்சுற்று படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு…!

சமீபத்தில் வெளியான படங்களில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாதவனின் ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு அனைத்து தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

மக்களின் பாராட்டுக்களுடன் பல திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்களும் இறுதிச்சுற்று படத்துக்கு கிடைத்து வருகின்றன.

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இறுதிச்சுற்று படத்தை பார்க்க ஆவலாய் இருப்பதாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அது போட்டோஷாப் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

பின்னர் உண்மையிலேயே மைக்டைசனின் பதிவுதான் என்பது உறுதியானது.

தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குநர் பாலா போன்றவர்களும் ‘இறுதிச்சுற்று’ படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்தனர்.

இந்த வரிசையில் இப்போது இயக்குநர் ஷங்கரும் சேர்ந்துள்ளார்.

இறுதிச்சுற்று படத்தை பார்த்துவிட்டு, தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் படக்குழுவினருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார் ஷங்கர்.

‘‘இறுதிச்சுற்று பெண்களுக்கு மரியாதை தரும் படம்! இயக்குநர் சுதா சிறப்பான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ரித்திகா, மாதவன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் சிறப்பான இசையை தந்துள்ளார்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ஷங்கர்.

ஷங்கருடைய பாராட்டு ‘இறுதிச்சுற்று’ படக்குழுவினரை சந்தோஷத்தில் வானில் பறக்க வைத்திருக்கிறது.

 




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better