Search
Saturday 15 December 2018
  • :
  • :

அட்ரா மச்சான் விசிலு படமும்… அங்கிள் ஆகிவிட்ட ரஜினி ரசிகர்களும்…

அட்ரா மச்சான் விசிலு படமும்… அங்கிள் ஆகிவிட்ட ரஜினி ரசிகர்களும்…

உலகம் முழுக்க எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எவ்வளவோ ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு நிகராக, எந்தவொரு நடிகனின் ரசிகனும் இருக்க வாய்ப்பே இல்லை.

சுய லாபம், எதிர்பார்ப்பு என எவ்வித பிரதிபலனும் இல்லாமல் வெறித்தனமாக…. கண்மூடித்தனமாக… தன் உயிரைவிட மேலாக…..  ரஜினியை நேசிக்கும் கூட்டம்தான் அவருடைய ரசிகர்கள்.

அது மட்டுமல்ல, வேகத்துக்கும் வீரத்துக்கும் பேர் போனவர்களும் ரஜினி ரசிகர்கள்தான்.

உடல் மண்ணுக்கு… உயிர் ரஜினிக்கு என்பதை உண்மையிலேயே கொள்கையாக வைத்திருப்பவர்கள்.

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் துள்ளிக் கொண்டிருக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களின் பக்கத்தில் கூட நிற்க முடியாது.

ரஜினி நடிக்கும் படங்களில் வில்லனாக அல்லது ரஜினிக்கு எதிரியாக நடித்தவர்கள் முதல் மூன்று வாரங்களுக்கு தப்பித்தவறி கூட தியேட்டர் பக்கம் வர முடியாது.

ரஜினியைப் பற்றி படத்தில் இடம்பெறும் கதாபாத்திரம் தவறாக பேசுவதைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

தர்மதுரை என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த ஒரு நடிகர் கமலா தியேட்டருக்குப்போய், ரஜினி ரசிகர்களிடம் செமத்தியாய் வாங்கிக் கட்டிக் கொண்டதும், கை கொடுக்கும் கை படத்தில் ரஜினிக்கு துரோகம் செய்யும் வேடத்தில் நடித்த சின்னி ஜெயந்த் ரஜினி ரசிகர்களிடம் மாட்டி சின்னாபின்னமானதும் கடந்த கால  வரலாறு.

அப்பேற்பட்ட ரஜினி ரசிகர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்பதுதான் கேள்வி.

சில திளங்களுக்கு முன் ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற அளவுக்கு நக்கல் அடித்திருக்கிறார்கள்.

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனை ரஜினியாக்கி அநியாயத்துக்கு அசிங்கப்படுத்தியுள்ளனர்.

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வைக்கப்பட்ட ஓப்பனிங் சீன் தொடங்கி, அவர் பேசும் பல பன்ச் வசனங்கள் வரை அப்படியே ரஜினியை  ஞாபகப்படுத்துகின்றன.

இப்படி வெளிப்படையாக ரஜினியை தாக்கி எடுக்கப்பட்டுள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தின் தயாரிப்பாளர் வேறு யாருமல்ல.

லிங்கா படத்தை வாங்கி நஷ்டப்பட்டதாக பிரச்சனையைக் கிளப்பி ரஜினியை டெனுணனாக்கிய சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர்தான் இந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்.

தனக்கும் ரஜினிக்கும் உள்ள பழைய பஞ்சாயத்துகளையே… அதாவது  லிங்கா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விவகாரத்தையே காட்சிகளாக்கி, ரஜினியை வெளுத்து இருக்கிறார்கள்.

இத்தனை வெளிப்படையாக ரஜினியை தாக்கி எடுக்கப்பட்ட அட்ரா மச்சான் விசிலு படத்தை ரஜினி ரசிகர்கள் எப்படி அனுமதித்தார்கள்?

இந்த வௌங்காத படத்துக்கு வீண் விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணி அமைதியாகிவிட்டார்களா?

கபாலி ரிலீஸ் நேரத்தில் இந்தப் பிரச்சனை எதற்கு என்று நினைத்துவிட்டார்களா?

அல்லது ரஜினி ரசிர்களுக்கு வயதாகி ‘அங்கிள்’ ஆகிவிட்டார்களா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better