Search
Tuesday 24 April 2018
  • :
  • :

இந்தியன் பனோரமாவில் தேர்வான ஒரே தமிழ் படம் – இறுதிச்சுற்று

இந்தியன் பனோரமாவில் தேர்வான ஒரே தமிழ் படம் – இறுதிச்சுற்று

கோவாவில் நடைபெறும் உலகப்படவிழாவில், இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்கு 250க்கும் மேற்பட்ட படங்கள்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தமிழில் சூர்யா தயா

ரித்து நடித்த ‘பசங்க-2′ மற்றும் ’24’ படமும், மாதவன் ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படமும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

 

இந்நிலையில் இந்தியன் பனோரமாவில் திரையிடப்படுவதற்கு 26 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அதில் இறுதிச்சுற்று படம் மட்டுமே தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

பல வெளிநாட்டுப் படங்களின் சாயல் இருப்பதால் 24 படம் தேர்வு செய்யப்படவில்லை.

26 படங்களில் ஹிந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் தலா 4 படங்கள் தேர்வாகியுள்ளன.

மலையாளம், கன்னடம் மொழிகளில் 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, மணிப்பூரி, சமஸ்கிருதம், அஸ்ஸாமி, கொங்கணி, கோஸ், ஆங்கிலம்  போன்ற மொழிப்படங்கள் தலா ஒன்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மிகப்பெரிய இண்டஸ்ட்ரியான தமிழ் தெலுங்குப் படங்களுக்கு இந்தியன் பனோரமாவில் போதிய எண்ணிக்கையில் படம் தேர்வாகாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better