Search
Thursday 15 November 2018
  • :
  • :

‘இந்தியன்-2’ கமலை முதல்வராக்குமா…?

‘இந்தியன்-2’ கமலை முதல்வராக்குமா…?

‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் படு பிசியாக இயங்கி வரும் ஷங்கர், இந்த படம் வெளியானதும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவியில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ இறுதி போட்டியில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

தெலுங்கில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக விளங்கும் தில் ராஜு ‘இந்தியன்-2’ படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா நடிப்பில் 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘இந்தியன்’.

முதல் பாகம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது.

ஷங்கர் தற்போது இயக்கும் ‘2.0’ படம் வெளியானதும் இப்படத்தின் வேலைகள் துவங்கவிருக்கின்றன.

கமல்ஹாசன் இப்போது அரசியலில் நுழைய திட்டமிட்டிருப்பதால், அதற்கு பொருத்தமாக இப்படத்திற்கு ‘லீடர்’ என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்ல, ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ படத்தின் கதையையும், ‘இந்தியன்’ படத்தில் இடம் பெற்ற லஞ்சம் ஒழிப்பு சம்பந்தமான விஷயங்களையும் மையமாக வைத்து ‘இந்தியன்-2’ வை எடுக்க இருக்கிறார்களாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better