Search
Saturday 20 January 2018
  • :
  • :

இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம் இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

’நான்’, ‘சலீம்’  என முதல் இரண்டு படங்களில் அடக்கி வாசித்த விஜய் ஆண்டனி இந்தியா பாகிஸ்தான் படத்தில் கலகல காமெடிக்கு மாறி இருக்கிறார்.
அலுவலகத்துக்கு வாடகைக்கு இடம் தேடுகிறார் விஜய் ஆண்டனி. அதே வீட்டை வேறொரு புரோக்கர் மூலம் பார்க்க வருகிறார் நாயகி சுஷ்மா ராஜ். வாடகை, அட்வான்ஸ் அவரையும் மலைக்க வைக்கிறது. இருவரும் அந்த வீட்டை ஆளுக்குப் பாதியாக பகிர்ந்து கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இருவருமே வக்கீல் தொழில் செய்பவர்கள் என்பதை  புரோக்கர்கள் மறைத்து விட, வாசலில் பெயர் பலகை வைக்கும்போது இருவருக்கும் உண்மை தெரிய வருகிறது.  நமக்கு வர்ற க்ளையண்ட் அந்தப்பக்கம் போய்விட்டால் என்று இருவருமே பயப்படுகிறார்கள்.
விஜய் ஆண்டனி, சுஷ்மாவை விரட்டிவிட்டு அலுவலகத்தை தானே வைத்துக்கொள்ள நினைக்க, சுஷ்மாவோ விஜய் ஆண்டனியை விரட்ட நினைக்கிறார். இருவரில் யார் அந்த அலுவலகத்தைக் கைப்பற்றியது என்பதை சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறார்கள்.
கிராமத்தில் உள்ள ஒரு நிலத்துக்கு உரிமை கொண்டாடும் பசுபதி – எம்.எஸ்.பாஸ்கர் கேஸ் இவர்கள் கைக்கு வருகிறது.
முதல் சில நிமிடங்கள் இயல்பான் நகைச்சுவையால் கலகலக்க வைக்கும் காட்சிகள், பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும் வந்தவுடன்  சூடுபிடிக்கிறது.
எக்ஸ்பிரஷனில் சிக்கனம் பிடித்தாலும் வக்கீல் கதாபாத்திரத்துக்கு  கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அளவாய் நடித்து, அளவாக சிரிக்கவும் வைத்திருக்கிறார்.
கதாநாயகி சுஷ்மா ராஜ்… அனுஷ்காவின் ஒண்ணுவிட்ட தங்கச்சிபோல் அவரது சாயலிலேயே அழகாய்  இருக்கிறார். அதைவிட, முதல்ப்பட நடுக்கம் இல்லாமல் இயல்பாய் நடித்திருக்கிறார். ஆட்டத்திலும் பின்னுகிறார்.
இசை.. விஜய் ஆண்டனி இல்லை. தீனா தேவராஜன்  என்ற புதியவர். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார்.
ஒளிப்பதிவு யாருங்க? செம.
எதிரும் புதிருமான கதாநாயகன், கதாநாயகியை குறிக்கும் வகையில்  இந்தியா – பாகிஸ்தான் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
நம்மளை ஏமாத்திட்டாங்களே என்று வெறுத்துப்போகாமல் பொருத்துப்போனால்… சிரிப்பு எக்ஸ்பிரஸில் ஒரு ரவுண்ட் போன மாதிரி சிரித்துவிட்டு வரலாம்.
இந்தியா பாகிஸ்தான் –  இது அக்மார்க் காமெடிப் படம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better