Search
Monday 21 January 2019
  • :
  • :

அனிரூத் அப்படி… இமான் இப்படி…

அனிரூத் அப்படி… இமான் இப்படி…

அஜித் நடித்த விவேகம் படத்தின் இசையமைப்பாளரான அனிருத்திடம் ஒவ்வொரு பாடலையும் வாங்குவதற்குள் படாதபாடுபட்டார் இயக்குநர் சிவா.

கடைசிநேரத்தில் ட்யூன்களைக் கொடுத்ததால் சரியான பாடல்களை தேர்வு செய்ய முடியாமல் திணறிப்போனார்.

அதனால்தான் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தை தேர்வு செய்யாமல் இமானை ஒப்பந்தம் செய்தனர்.

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை வருகிற 23-ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்க திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கவுன்சில் உத்தரவிட்டிருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் விசுவாசம் படத்திற்காக இரண்டு பாடல்களை முன்கூட்டியே ரெடி செய்து விட்டார் இசை அமைப்பாளர் டி.இமான்.

இமானின் பாடல்களைக் கேட்ட சிவா அதை அஜித்துக்கும்போட்டுக்காட்ட, டபுள் ஹேப்பியாகிவிட்டாராம் அஜித்.

தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்க உள்ளார்கள்!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better