Search
Monday 17 December 2018
  • :
  • :

ஹரிஷ் கல்யாணை இயக்கும் புரியாத புதிர் இயக்குநர்

ஹரிஷ் கல்யாணை இயக்கும் புரியாத புதிர் இயக்குநர்

சிந்துசமவெளி, பொறியாளன் போன்ற படங்களில் நடித்தும் ஹரீஷ் கல்யாண் க்ளிக் ஆகாத ஹீரோவாகவே இருந்தார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அவருக்கு பப்ளிசிட்டி கிடைத்தது.

அதை வைத்து ஹரிஷ் கல்யாணுக்கு ஓரளவு படவாய்ப்புகள் தேடி வந்தன.

இவர் இப்போது இளன் இயக்கத்தில் ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யுவன் சங்கர்ராஜா தயாரிக்கும் இந்த படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் [பதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி படு தோல்வியடைந்த ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கியவர் இவர்.

‘புரியாத புதிர்’ படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரஞ்சித் ஜெயக்கொடி தற்போது இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பைப்பெற்றிருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சினிமா ஸ்டிரைக் முடிவடைந்ததும் வெளியாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better