Search
Sunday 24 June 2018
  • :
  • :

கார்த்தியுடன் முதன்முறையாக இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

கார்த்தியுடன் முதன்முறையாக இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் ‘தேவ்’ என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி!

சூர்யாவின் மகன் தேவ் பெயரில் கார்த்தி நடிக்கும் இந்த படத்தை தயாரித்த ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லக்‌ஷமன் தயாரிக்கிறார்.

சூர்யா நடித்த ‘சிங்கம்-2’, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் இது.

அதிரடி ஆக்‌ஷன், அட்வெஞ்சர், காமெடி படமாக மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளை இமயமலைப்பகுதிகளிலும், மும்பையிலும், ஐரோப்பாவிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

தேவ் படத்தில் ஸ்டைலிஷான லுக்கில் நடிக்கிறார் கார்த்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கார்த்தி, ரகுல்ப்ரீத்சிங் இரண்டாவதுமுறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

தேவ் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். கார்த்தியுடன் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் முதல் படம் இது.

அது மட்டுமல்ல, ஹாரிஸ் ஜெயராஜ் கைவசம் இருக்கும் ஒரே தமிழ்ப்படம் தேவ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better