Search
Thursday 17 January 2019
  • :
  • :

ரிவர்ஸ் கியரில் ஹன்சிகா மார்க்கெட்…?

ரிவர்ஸ் கியரில் ஹன்சிகா மார்க்கெட்…?

விஜய்யுடன் ஏற்கனவே ‘வேலாயுதம்’ படத்தில் இணைந்து நடித்த ஹன்சிகா, தற்போது ‘புலி’ படத்திலும் விஜய்க்கு ஜோடியாகி இருக்கிறார்.

‘புலி’ படத்தில் விஜய் உடன் நடித்த ஹன்சிகா ஏற்கனவே சூர்யா உடன் ‘சிங்கம்-2’ படத்தில் நடித்தார்.

விஜய், சூர்யாவை அடுத்து அஜித், விக்ரம் என மற்ற முன்னணி ஹீரோக்கள் உடன் ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் சிம்பு உடன் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் கமிட்டானதால் பல படங்களை ஹன்சிகா இழக்க வேண்டியதாயிற்று.

இந்நிலையில், தற்போது புதிய படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகி இருக்கிறார் ஹன்சிகா.

நயன்தாரா உடன் இணைந்து ஜீவா நடிக்கும் ‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.

இந்த படம் முடிந்த உடன் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் இயக்கத்தில் ‘போக்கிரி ராஜா’ என்ற படத்தில் நடிக்கிறார் ஜீவா.

ரொமாண்டிக், காமெடி, த்ரில்லர் ரக படமாக வளரும் இந்த படத்தில்தான் ஜீவாவுக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார்.

ஜீவா உடன் ஹன்சிகா நடிப்பதே பெரிய காம்போதான்.

ஆனாலும், ஹன்சிகா மட்டும் போதாது என்று ‘போக்கிரி ராஜா’ படத்தில் இன்னொரு கதாநாயகியையும் புக் பண்ண உள்ளனர்.

அவர் ஹன்சிகாவை விட பெரிய நாயகியாக இருந்தால் ஹன்சிகாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுவருவதாகவே அர்த்தம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better