Search
Thursday 24 January 2019
  • :
  • :

ஹன்சிகாவின் 50 ஆவது பட அறிவிப்பு வெளியாகாதது ஏன்?

ஹன்சிகாவின் 50 ஆவது பட அறிவிப்பு வெளியாகாதது ஏன்?

பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய ஹன்சிகா மோத்வானி, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

2007-ல் வெளியான இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஹன்சிகா.

இந்தப் படத்தை தொடர்ந்து பல தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்த ஹன்சிகா தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்தப் படத்தை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல தமிழ்ப் படங்களில் நடித்த ஹன்சிகா இப்போது 50 படங்களை தொட்டிருக்கிறார்.

விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுடன் ‘100’ என இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா!

ஹன்சிகா அடுத்து நடிக்கவிருக்கும் படம் அவரது 50-வது படம்.

இந்த படத்தின் அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஹன்சிகாவின், 50-வது படத்திலும் தனுஷ் ஹீரோவாக நடிப்பது ஆச்சர்யமான ஒற்றுமை.

இந்தப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 9-ஆம் தேதி) வெளியாகவிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதால் ஹன்சிகாவின் 50வது படம் வெளியாகவில்லை.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better