Search
Monday 17 December 2018
  • :
  • :

கோவா செல்லும் ஐங்கரன் படக்குழு

கோவா செல்லும் ஐங்கரன் படக்குழு

‘ஈட்டி’ படத்தை அடுத்து ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி வரும் படம் – ‘ஐங்கரன்’.

இந்தப் படத்தின் ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

திரைப்படத்துறையினரின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தற்போது ஐங்கரன் பட பணிகள் முடங்கியுள்ளன.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் அந்தப்பாடல் காட்சியை கோவாவில் படமாக்க படக்குழு புறப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ், மஹிமா நடிப்பில் எடுக்கப்படவிருக்கும் பாடல் அது.

காதல், ஆக்‌ஷன் பின்னணியில் தயாராகியுள்ள இந்தப்படத்தில் முக்கியமான சமூகப்பிரச்சனை பற்றியும் பேசி இருக்கிறார் இயக்குநர் ரவிஅரசு.

‘ஈட்டி’ படத்தில் ஹீரோ அதர்வாவை விளையாட்டு வீரராக வைத்தார்.

ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு மெக்கானிக்கல் என்ஜினியரிங் கல்லூரி மாணவனாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டைலில் பல புதியவிஷயங்களை புகுத்தியிருக்கிறாராம் ரவிஅரசு.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better