Search
Saturday 22 September 2018
  • :
  • :

ஜி.வி.பிரகாஷ்குமாரின் புதிய முடிவு

ஜி.வி.பிரகாஷ்குமாரின் புதிய முடிவு

செம படத்தை அடுத்து அடங்காதே, ஐங்கரன், சர்வம் தாளமயம், ஜெயில், குப்பத்து ராஜா என அரைடஜன் படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகின்றன.

இவற்றில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர விருப்பது சர்வம் தாளமயம் படம்தான்.‘

இந்தப்படத்துக்குப் பிறகு குப்பத்து ராஜா படம் திரைக்கு வருகிறது.

அதன் பிறகு, ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே உடன் இணைந்து நடிக்கும் ‘100% காதல்’ படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘100% லவ்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் ஏவிஎம்மில் தொடங்கி ஒருவாரம் நடைபெற்று முடிவடைந்தது.

எம்.எம்.சந்திரமௌலி இயக்கும் இந்த படத்தின் காட்சிகள் வெளிநாட்டில் நடப்பதால், இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பை லண்டனில் நடத்தி முடித்தனர்.

தான் நடிக்கும் படத்துக்கு தானே இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

‘100% காதல்’ படம் தனக்கு வேறு ஒரு இமேஜைக் கொடுக்கும் என்று நம்பும் ஜி.வி.பிரகாஷ்குமார் இனிமேல் வருடத்துக்கு அதிகபட்சம் 3 படங்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தீர்மானித்தள்ளார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better