Search
Thursday 16 August 2018
  • :
  • :

‘60 வயது மாநிறம்’ உண்மையான தயாரிப்பாளர் யார்?

‘60 வயது மாநிறம்’ உண்மையான தயாரிப்பாளர் யார்?

ஜோதிகாவை வைத்து ராதா மோகன் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’ அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையில் ‘60 வயது மாநிறம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள மற்றொரு படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார் ராதா மோகன்.

பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி கதாநாயகர்களாக நடிக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தில் இந்துஜா, குமாரவேல், ஷரத், மதுமிதா, ஆகியோரும் நடித்துள்ளனர்.

2015ல் வெளியான ஒரு கன்னட படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

‘60 வயது மாநிறம்’ படத்தைத் தயாரித்தது நடிகர் பிரகாஷ்ராஜ்தான். அவருடைய பேனரில் படத்தை வெளியிட்டால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் அந்தப்படத்தை கலைப்புலி தாணுவின் பெயரில் வெளியிடுகிறாராம் பிரகாஷ்ராஜ்.

‘60 வயது மாநிறம்’ படத்தின் விளம்பரங்களிலும், செய்திகளிலும் பிரகாஷ்ராஜ் தயாரிப்பு என்பதை கவனத்துடன் தவிர்த்து வருகின்றனர்.

‘காற்றின் மொழி’ படத்திற்கு முன்பாக ராதாமோகன் இயக்கி முடித்துவிட்ட இப்படம் ‘காற்றின் மொழி’ படத்திற்கு முன்னதாகவே திரைக்கும் வருகிறது. ‘60 வயது மாநிறம்’ படத்தை இம்மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

ராதாமோகனின் மற்றொரு படமான ‘காற்றின் மொழி’ அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

விக்ரம் பிரபு நடிப்பில் ‘துப்பாக்கி முனையில்’ என்ற மற்றொரு படத்தையும் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better