Search
Saturday 20 October 2018
  • :
  • :

ஞானவேல்ராஜா ஆபாசப் பேச்சின் பின்னணி…

ஞானவேல்ராஜா ஆபாசப் பேச்சின் பின்னணி…

மேடை நாகரிகத்தை மீறி ஞானவேல்ராஜாவை ஆபாசமாக பேச வைத்தது யார்?

ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடித்துள்ள ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பரபரப்பாக்கிவிட்டார் பட அதிபர் ஞானவேல்ராஜா.

வழக்கமானதொரு  சம்பிரதாயமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய எமன் படத்தின் இசைவிழா ஞானவேல்ராஜாவின் அனல் பறக்கும் பேச்சால் கவனஈர்ப்பை பெற்றுவிட்டது.

எமன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், அறிவழகன், சசி, மகிழ் திருமேனி, நடிகர்கள் விஜய் சேதுபதி, தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சம்பிரதாயமாகப் பேசினார்கள்.

தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா பேசும்போது தன் மனக்குமுறலை கொட்டித்தீர்த்தார்.

சிங்கம்-3 படம் பிப்ரவரி 9 அன்று வெளிவரஉள்ளநிலையில் அதே தினம் காலை 11 மணிக்கு தமிழ் ராக்கார்ஸ் இணையதளத்தில் வெளியிடப்போவதாக முன் அறிவிப்பு செய்திருந்தனர்.

அதைப் பற்றி பேச ஆரம்பித்த கே.ஈ.ஞானவேல் ராஜா தமிழ்ராக்கர்ஸ் இணையதள ஆட்களை கெட்ட வார்த்தையில் திட்டினார்…

சபை நாகரிகம், மேடை நாகரிகம், பெண்கள் குழுமியுள்ள சபையில் ஆபாசமாகப் பேசலாமா என்ற தர்க்கங்களை மீறி அவருடைய வலி வார்த்தைகளாக வெளிப்பட்டது.

“விஜய் ஆண்டனியை அறிமுக காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது அவருடைய வளர்ச்சி தெரிகிறது. ஜீவா சங்கர் இப்படத்தின் மூலமாக அடுத்த கட்டத்துக்குச் செல்வார்.”

என்று சம்பிரதாயமாக எமன் படத்தை டச் பண்ணிவிட்டு ட்ராக்கை மாற்றினார்….

‘‘ஜெயம்’ ரவி, அர்விந்த்சாமி நடித்துள்ள ‘போகன்’ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் அதற்குள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்கள். அதன் மூலமாக பல லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். அப்படத்தின் தயாரிப்பாளருக்கு இதனால் எவ்வளவு பெரிய வலி ஏற்பட்டிருக்கும்.

சமீபத்தில் பவன் கல்யாண் நடித்த ஒரு தெலுங்குப் படம் எடிட் ஷூட்டிலிருந்து வெளியாகி இணையத்தில் அப்லோடு பண்ணாமல் டிவிடி மட்டும் வெளியே வந்து விட்டது. அப்போது பவன் கல்யாண் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வந்து படங்களைப் பாருங்கள், டிவிடியில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவர் கேட்டு கொண்டதை தொடர்ந்து ரசிகர்கள் தியேட்டருக்கு வந்துதான் அந்தப்படத்தை பார்த்தார்கள். அந்தளவுக்கு ஆந்திராவில் உள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது!”

என்று வேதனையுடன் பேச்சைத் தொடர்ந்த ஞானவேல்ராஜா டாப் கியருக்கு மாறினார்…

“இங்கு ஃபேஸ்புக்கில் முழுப்படத்தையும் வெளியிடும் தைரியம் ஒருவனுக்கு இருக்கிறது. அதையும் மக்கள் பார்க்கிறார்கள். நான் தயாரித்த ‘சி 3’ திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு LIVE STREAMING செய்கிறோம் என தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். மொத்த ‘சி-3’ குழுவின் 2 வருட உழைப்பு என்னாவாகிறது. பைனான்ஸ் பிரச்சனைகள் சரி செய்து படம் வெளிவருமா, இல்லையா என்ற பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தே…….மகன் நான் 11 மணிக்கு லைவ் போடுவேன் என்பதை சவாலால் விடுகிறான்! இதை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரண்டு நாட்கள் முன்பு வரை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்க வேண்டாம் என்றுதான் இருந்தேன். இதுபோன்ற பிரச்சனைகளை கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காகவே தமிழ் திரைப்பட தயாரிப்பாள சங்கத்தின் தேர்தலில் நிற்க முடிவு செய்திருக்கிறன். தமிழ் ராக்கார்ஸ் நாயை இன்னும் 6 மாதத்துக்குள் பிடித்து ஜெயிலில் தள்ளுவோம். ”

என்று சவால்விட்ட ஞானவேல்ராஜா பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

“மக்களுக்கு எந்த கோபத்தை எங்கு காட்டுவது என்பது தெரியவில்லை. ஒரு படத்துக்குள் நிறையப் பேர் உழைக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உழைப்பு உங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான். அதனை புரிந்து கொண்டு அதற்கான மரியாதையை திரைத்துறைக்கு எல்லோரும் கொடுக்க வேண்டும்”
என்று பேசினார் ஞானவேல்ராஜா.

நியாயமான பேச்சு….

வரிவிலக்கு அளிக்கப்பட்ட படங்களின் கட்டணத்தைக் குறைத்து அந்த வரிவிலக்கு பயனை மக்களுக்கே கொடுத்தால்,

அவர்களும் சினிமாக்காரர்களுக்கு உண்மையாக இருப்பார்களே…

நீங்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.
Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better