Search
Thursday 13 December 2018
  • :
  • :

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஜூலை 14 வருமா…?

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஜூலை 14 வருமா…?

அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் ‘ஓடம்’ இளவரசு இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’.

அதர்வாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

சூரி, ‘மொட்டை’ ராஜேந்திரன், தயாரிப்பாளர் டி.சிவா, மயில்சாமி முதலானோரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தை இம்மாதம் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர்.

தற்போது நடைபெறும் தியேட்டர் ஸ்டிரைக் காரணமாக பட வெளியீட்டை தள்ளி வைக்க ஆலோசனை நடைபெறுகிறது.

சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்திற்கு அனைவரும் பார்க்க தகுதியான படம் என்பதற்கான ‘யு’ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

இதனால் மகிழ்ச்சியடைந்த டி.சிவா ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தை இம்மாதம் 14ஆம் தேதி வெளியிடும் முயற்சியில் இறங்கினார்.

இந்நிலையில் தியேட்டர் ஸ்டிரைக் வந்ததால் ஒரு வாரம் தள்ளி ஜூலை 21 அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better