Search
Sunday 24 February 2019
  • :
  • :

கௌதம் கார்த்திக்குக்கு ஜோடி கிடைச்சாச்சு

கௌதம் கார்த்திக்குக்கு ஜோடி கிடைச்சாச்சு

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு, க்ளிக் ஆகாமல்போன வாரிசு நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் கௌதம் கார்த்திக்கும் ஒருவர்.

மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான அவர் இதுவரை நடித்த ஒரு படம் கூட ஓடவில்லை.

இந்நிலையில்,  ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ முதலான படங்களை இயக்கிய கண்ணன் அடுத்து இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தை ‘அபிரா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் ஆஷாஸ்ரீ என்பவர் தயாரிக்கிறார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகாமலே இருந்தது.

இப்போது, இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது முடிவாகி உள்ளது.

அண்மையில் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம்  ‘யு-டர்ன்’.

இந்தப் படத்தில் நடித்த ஷ்ரதா ஸ்ரீநாத்தைத்தான் இப்போது கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி சேர்த்துள்ளார் இயக்குநர் கண்ணன்.

நிவின் பாலி நடிப்பில் கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வரும் பெயரிடப்பாடாத படத்திலும் ஷ்ரதா ஸ்ரீநாத் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better