Search
Sunday 24 February 2019
  • :
  • :

மீண்டும் ஆபாசப்படத்தில் கௌதம் கார்த்திக்

மீண்டும் ஆபாசப்படத்தில் கௌதம் கார்த்திக்

கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக் அதன் பிறகு பல படங்களில் நடித்தார்.

அவர் நடித்த படங்கள் எதுவும் வணிகரீதியில் வெற்றியடையவில்லை.

ஹரஹர மகாதேவகி, இருட்டுஅறையில் முரட்டு குத்து ஆகிய இரண்டு படங்கள் எட்டுமே அவரது நடிப்பில் வெற்றியடைந்தன. இந்த இரண்டு படங்களும் அடல்ட் கண்ட்ன்ட் என்கிற ஆபாசப்படங்கள்.

இருட்டுஅறையில் முரட்டு குத்து படம் வெளியானபோது கௌதம்கார்த்திக் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. அப்போது இனி அடல்ட் கண்ட்ன்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னார்.

தற்போது அவரதுநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹரஹர மகாதேவகி, இருட்டுஅறையில் முரட்டு குத்து படங்களின் இயக்குநரான சந்தோஷ் பி ஜெயகுமாரின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் கௌதம் கார்த்திக்.

இந்தப்படமும் முந்தையப்படங்களைப்போலவே ஆபாசம்நிறைந்த படம்தானாம். தனக்கு கமர்ஷியலாக வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தப்படத்தில் நடிக்கிறாராம் கௌதம் கார்த்திக்.

அவரை அவரது தாத்தா முத்துராமனின் ஆன்மா மன்னிக்குமா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better