Search
Wednesday 15 August 2018
  • :
  • :

விஜய்சேதுபதி போலவே கௌதம் கார்த்திக்…

விஜய்சேதுபதி போலவே கௌதம் கார்த்திக்…

இந்த ஆண்டு அதிகப்படங்களில் நடித்த ஹீரோ விஜய்சேதுபதி மட்டுமல்ல, கௌதம் கார்த்திக்கும்தான்.

அவரது நடிப்பில் இந்த ஆண்டு 5 படங்கள் வெளியாகியுள்ளன.

எனவே கௌதம் கார்த்திக்கைப் பொறுத்தவரை 2017ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகத்தான் இருக்கும்.

இந்த ஆண்டில் கௌதம் கார்த்திக்கின் முதல் படமாக ‘முத்துராமலிங்கம்’ வெளியானது.

இரண்டாவது படமாக ‘ரங்கூன்’ திரைக்கு வந்தது.

மூன்றாவது படமாக ‘இவன் தந்திரன்’ வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து நான்காவது படமாக கடந்த மாதம் ‘ஹரஹர மகாதேவகி’ வெளியானது.

இந்நிலையில் அவரது நடிப்பில் ஐந்தாவது படமாக ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் அவர் மகன் கலாபிரபு இயக்கியுள்ள ‘இந்திரஜித்’ படம் நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக் இத்தனை காலம் ரேசில் பின்தங்கியிருந்தார்.

கார்த்திக்கின் வாரிசு எடுபடாமல் போய்விட்டாரே என்ற விமர்சனம் எழுந்தது.

அவற்றை பொய்யாக்கும் வகையில் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறார் கௌதம்கார்த்திக்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better