Search
Tuesday 25 September 2018
  • :
  • :

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம்

‘குற்றம் 23’ படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் அறிவழகன்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘குற்றம் 23’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன்.

திரைக்கதை எழுதும் பணி முடிவடைந்தநிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கறார்.

சிம்பு நடித்த ஏஏஏ படத்தினால் 20 கோடி நஷ்டமடைந்துள்ள மைக்கேல் ராயப்பன் தற்போது கீ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படம் தயாரிப்புநிலையில் இருக்கும்போதே அடுத்தப் படமாக அறிவழகன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்.

‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘100% காதல்’ ‘குப்பத்துராஜா’ஆகிய படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அவற்றை முடித்துவிட்டு அறிவழகன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better