விஜய் சேதுபதி அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவுக்கு கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
அதனாலோ என்னவோ ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படத்திலும் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்.
இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் ‘புரூஸ்லீ’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
‘புரூஸ்லீ’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக கீர்த்தி கர்பண்டா நடிக்கிறார்.
மற்றும், ஆனந்த் ராஜ், பாலசரவணன் ஆகியோரும் நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக சென்னை பூந்தமல்லி அருகே மூடப்பட்டு கிடக்கும் ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்ட அரண்மனை செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செட் அமைக்க கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக தயாரிப்பு தரப்பு சொல்கிறது.
இந்த செட்டில் வில்லன் உடன் ஜி.வி.பிரகாஷ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஷெட்யூல் படப்பிடிப்பை முடிந்ததும் தொடர்ந்து திருச்சியில் ‘புரூஸ்லீ’படத்தின் ஷூட்டிங் நடைபெறவிருக்கிறது.
த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தில் சிநல காட்சிகள் திருச்சியில் படமாக்கப்பட்டது.
அப்படம் பெற்ற வெற்றி காரணமாக சென்ட்டிமெண்ட்டுக்காக இந்தப் படத்தின் படப்பிடிப்பையும் திருச்சியில் நடத்த உள்ளனராம்.
வௌங்கிடும்.