Search
Sunday 24 June 2018
  • :
  • :

மணிரத்னம் படத்தில் ஃபஹத்பாசில் நடிக்க மறுத்தது ஏன்?

மணிரத்னம் படத்தில் ஃபஹத்பாசில் நடிக்க மறுத்தது ஏன்?

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.

அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் முதலானோர் நடித்து இந்த படத்தில் ‘அங்கமாலி டைரீஸ்’ மலையாள படத்தின் மூலம் புகழ் பெற்ற அப்பானி சரத்தும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லிங்குசாமி இயக்கி வரும் ‘சண்டக்கோழி-2’ படத்திலும் அப்பானி சரத் நடிக்கிறார்.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் முதலில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஃபஹத் ஃபாசில் இப்படத்திலிருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து ஃபஹத் ஃபாசிலுக்கு பதிலாக அருண் விஜய்யை கமிட் பண்ணினார் மணிரத்னம்.

அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தற்போது தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் தன்னை நெகட்டிவ்வாக காட்டியது ஃபஹத்பாசிலுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அதனாலேயே வேலைக்காரன் படம் பற்றி அவர் அதிகம் பேசவில்லை என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் மணிரத்னம் படத்தில் மீண்டும் வில்லன் வேடம் என்றதும் மறுத்துவிட்டாராம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better