Search
Wednesday 20 June 2018
  • :
  • :

சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் ஃபஹத்பாசில்

சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் ஃபஹத்பாசில்

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 5ஆம் தேதியன்று வெளியானது.

ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து படம் வெளியாகிறது.

எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார் மோகன் ராஜா.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் அறிவு என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம்.

படிப்பறிவு இல்லாத அனாதையான அறிவு ஒரு சேரிப்பகுதியின் மிகப்பெரிய பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பதே படத்தின் கதையாம்.

கதாநாயனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஆதி என்ற கேரக்டரில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளாராம்.

‘ஆதி’ கேரக்டருக்கு தன் சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் ஃபஹத்.

சிவகார்த்திகேயன், ஃபஹத் கேரக்டர்களுக் அறிவு, ஆதி என்ற பெயர்களோடு வேவ்வேறு காட்சிகளில் வேறு பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நயன்தாராவுக்கு மிருணாளினி என்ற கேரக்டர்.

மோகன் ராஜாவின் முதல் படமான ‘அனுமான் ஜெயந்தி’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த சினேகா, 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் ராஜாவுடன் இணைந்துள்ளார்.

இந்தப்படத்தில் கஸ்தூரி என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம் சினேகா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better