Search
Sunday 24 February 2019
  • :
  • :

விஜய் ஆண்டனியின் டுயல் ரோல்

விஜய் ஆண்டனியின் டுயல் ரோல்


விஜய் ஆண்டணி நடித்துவரும் சைத்தான் படத்தை இயக்கி வருபவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இவர் சொன்ன கதையில் இம்ப்ரஸ்ஸாகி  சைத்தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனி, பின்னர் கதைல் மூக்கை நுழைத்து பல காட்சிகளை மாற்றிவிட்டாராம்.

அது மட்டுமல்ல படத்தின் ப்ளாஸ்பேக்கில் வரும் முக்கிய வேடத்திலும் இயக்குநரின் ஒப்புதல் இல்லாமல் தானே நடித்துவிட்டார்.

இதனால் விஜய் ஆண்டனி மீது கடும் வருத்தத்தில் இருந்தார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

அவரது வருத்தத்தை அறிந்த விஜய் ஆண்டனி, அவரை சமாதானப்படுத்தியதோடு, ‘கட்டப்பாவை காணோம்’ படத்தை அடுத்து நடிக்க நல்ல கதையைத் தேடிக் கொண்டிருந்த சிபிராஜிடம், பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி கொடுத்த பில்ட்அப்பை நம்பி  பிரதீப் கிருஷ்ணமூர்த்தியிடம் கதை கேட்டிருக்கிறார் சிபிராஜ்.

அவர் சொன்ன கதை பிடித்துப்போனதால், உடனே ஓகே சொல்லிவிட்டார்.

தற்போது தனது அடுத்த படம்  பிரதீப் கிருஷ்ண்மூர்த்தி இயக்கத்தில்தான் என்று அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சிபிராஜ்.

சிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’ பட வேலைகளும், பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் ‘சைத்தான்’ பட வேலைகளும் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளன.

இரண்டும் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்குமாம்!

இப்படத்தின் கதாநாயகி கேரக்டருக்கு ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

அத்துடன் இப்படம் தெலுங்கு வெற்றிப் படமான ‘கஷாண’த்தின் ரீ-மேக் என்று சொல்லப்பட்டு வந்தது.

இது நானே எழுதிய கதை என்று அந்த தகவலை தற்போது மறுத்துள்ளார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better