Search
Tuesday 19 December 2017
  • :
  • :

டோரா – விமர்சனம்

டோரா – விமர்சனம்

பேய்ப்படத்தைவிட, பேய்ப்படம் பார்க்கப்போகிறோமே என்பதை நினைத்தாலே பீதியாக இருக்கும்.

அந்தளவுக்கு கடந்த சில வருடங்களாக சகட்டுமேனிக்கு பேய்ப்படங்களை எடுத்து நம்மை சாகடித்துவிட்டனர்.

இப்படியொரு அச்சத்தோடு ‘டோரா’வைப் பார்க்க தியேட்டருக்குப்போனால்…  ‘இது வேறு மாதிரியான பேய்ப்படம் பாஸ்’ என்று சொல்ல வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி.

ஹாரர் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட்டிலிருந்து முற்றிலுமாக  விலகாத திரைக்கதை என்றாலும், ஓரளவு புதிதாக யோசித்திருக்கிறார்.

கால் டாக்ஸி தொழில் தொடங்குவதற்காக நயன்தாராவும், அவரது அப்பா தம்பி ராமையாவும் அந்தக்காலத்து ஆஸ்டின் கார் ஒன்றை வாங்குகிறார்கள். (என்னமா யோசித்திருக்கிறார் பாருங்கள்?)

பார்ப்பதற்கு சாதாரணமான டப்பா காரைப்போல் தோற்றம் அளிக்கும் அந்த பழைய காருக்குள் ஒரு ஆவி இருந்து, டிரைவர் இல்லாமல் தானாகவே ஓடி, எதிரிகளை பழிதீர்க்கிறது. காருக்குள் இருப்பது யாருடைய ஆவி? அது ஏன் காருக்குள் குடியிருக்கிறது? அந்த காருக்கான ஃப்ளாஷ்பேக் என்ன? போன்ற கேள்விகளுக்கான சுவாரஸ்யமான விடைதான் ‘டோரா!
ஹாரர் படம் என்றாலும் முதல்பாதியில் தம்பி ராமையாவை காமெடியில் விளையாட விட்டிருக்கிறார் இயக்குநர்.

நயன்தாரா காம்பினேஷன் என்பதாலோ என்னவோ டபுள் உற்சாகத்தில் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார் ராமையா. சில காட்சிகளில் சிரிக்கவும், பல காட்சிகளில் அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறார். அதனாலேயே முதல்பாதி நொண்டி அடிக்கிறது.

காருக்குள் இருப்பது யாருடைய ஆவி? நயன்தாராவுக்கும் அந்த காருக்குமான பந்தம் என்ன என்பதை சொல்லும் ப்ளாஷ்பேக்தான் டோராவின் பலம்.

அதன் பிறகே படத்தில் மனசைத் திருப்ப முடிகிறது. அதன் பிறகு கவனத்தை வேறெங்கும் திருப்பமுடியாத அளவுக்கு விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை போன்றவைதான் ஹாரர் படத்துக்கு  முக்கிய பலம்.

இந்த மூன்று அம்சங்களும் டோரா படத்தில் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கின்றன.

டோரா… டோரா….  பாடலில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் பட்டையைக் கிளப்பி இருக்கின்றனர் விவேக்- மெர்வின் இரட்டையர்.

தொழில்நுட்பக்கலைஞர்களை மட்டுமின்றி, நட்சத்திரங்களை தேர்வு செய்ததிலும் பாதி வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குநர்.

முக்கியமாக நயன்தாரா.  செமயாக நடித்திருக்கிறார். சொந்தக்குரலில் பேசியிருப்பது ரசிக்க வைத்தாலும்… தமிழ்உச்சரிப்பு போதாது மோளே… பண்ணையார் என்பதற்கு பணியாரம் என்கிறார் ஒரு கட்சியில்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்க ஹரிஷ் உத்தமன், வில்லனாக சுலில்குமார் பொருத்தமான தேர்வு.

முதல் பாதியில் சோதித்து, இரண்டாம்பாதியில்  சாதித்திருக்கிறார் இயக்குநர் தாஸ் ராமசாமி.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better