Search
Saturday 20 October 2018
  • :
  • :

காணாமல் போன ராகவா லாரன்ஸ்

காணாமல் போன ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரீனா எழுச்சியின்போது அடிக்கடி அடிபட்ட பெயர் ராகவா லாரன்ஸ்.

மெரீனா எழுச்சிக்கே அவர்தான் காரணம் என்பதுபோல் அடிக்கடி பிரஸ்மீட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ராகவா லாரன்ஸின் இந்த செயல் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

அவர் அப்போது நடித்து வந்த மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா படங்களின் பப்ளிசிட்டிக்காவே இப்படி எல்லாம் சீன் போடுகிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்த கூற்றை உண்மையாக்குவதுபோல் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா படங்களின் வெளியீட்டுக்குப் பிறகு அமைதியாகிவிட்டார் லாரன்ஸ்.

இடைப்பட்ட காலத்தில் நெடுவாசல், காதிராமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் எழுச்சியைக் கூட லாரன்ஸ் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாரன்ஸ் பெயர் ஊடகங்களில் அடிபட்டிருக்கிறது.

சாரதி இயக்கத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காவியன்’.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கில் ‘வாடு ஒஸ்தாடு’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better