Search
Thursday 15 November 2018
  • :
  • :

பாரதிராஜாவுக்கு எதிராக திரளும் இயக்குநர்கள்

பாரதிராஜாவுக்கு எதிராக திரளும் இயக்குநர்கள்

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 96.

வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் இன்னமும் பல்வேறு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

96 படம் திரைக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் மீது சர்ச்சை எழுந்தது.

அதாவது, சில வருடங்களுக்கு முன்பு 92 என்ற பெயரில் சுரேஷ் என்ற உதவி இயக்குனர் உருவாக்கிய கதையை, பிரேம்குமார் காப்பியடிடுத்து 96 என்ற பெயரில் படமாக இயக்கி உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தான் உருவாக்கிய 92 கதையை சில வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா தயாரிப்பதாக இருந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.

சுரேஷ் சொல்வது உண்மைதான் என்றும் 96 படத்தின் கதை 92 கதையிலிருந்து திருடப்பட்டது என்றும் பாரதிராஜா பகிரங்கமாக அறிவித்தார்.

96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாரை அழைத்து இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

92 கதாசிரியர் சுரேஷுக்கு நஷ்டஈடு வழங்கும்படி பேச்சுவார்த்தையில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கு ஆதரவாக இளம் இயக்குனர்கள் களமிறங்கியுள்ளனர்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா உட்பட இளம் இயக்குனர்கள் பலரும் பிரேம்குமாருக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து பிரேம்குமாருக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதை அறிவிக்க உள்ளதோடு பாரதிராஜாவுக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவிக்க உள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better