Search
Saturday 20 October 2018
  • :
  • :

துப்பறிவாளன் படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

துப்பறிவாளன் படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

’விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இமானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘துப்பறிவாளன்’.

சுமார் 15 கோடி பட்ஜெட்டில் தயாரான துப்பறிவாளன் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

விமர்சகர்களிடம் மட்டுமல்ல ரசிகர்களிடமும் கலவையான விமர்சனமே பெற்றுள்ளது.

சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் கூட சென்னை போன்ற பெரு நகரங்களில் பல தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகவில்லை.

அதனால் சற்றே அப்ஸெட்டாகியிருந்த விஷால் தரப்புக்கு துப்பறிவாளன் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் பாராட்டியது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

‘2.0’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இயங்கி வரும் இயக்குநர் ஷங்கர் ‘துப்பறிவாளன்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘‘மிஷ்கின் பாணியில் ரசிக்கும்படியான ஒரு த்ரில்லர் படம் துப்பறிவாளன். விஷாலின் கேரக்டர் வடிவமைப்பும், பெர்ஃபார்மென்ஸும் அருமையாக அமைந்துள்ளன. படக்குழுவினருக்கு என்னோட வாழ்த்துக்கள்’’ என்று ட்வீட் செய்திருந்தார்.

ஷங்கரின் பாராட்டை அப்படியே மீடியாக்களுக்கு அனுப்பி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது விஷால் தரப்பு.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better