Search
Friday 27 April 2018
  • :
  • :

பூஜா ஹெக்டேவை மாற்றிய இயக்குநர் மிஷ்கின்

பூஜா ஹெக்டேவை மாற்றிய இயக்குநர் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

கர்னாடகாவைச் சேர்ந்த இவர் முகுமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பூஜா, கதாநாயகனாக நடித்த ஜீவா உடன் நெருக்கமாகப் பழகினார்.

பாடல்காட்சிக்கு வெளிநாடு சென்றபோது பூஜா ஹெக்டே தன்னோடு பழகாமல் ஜீவா உடன் சுற்றிக்கொண்டிருந்தார் என்பதற்காக, அந்தப் பாடல் காட்சியில் அவரை லாங்ஷாட்டில். நடக்கவிட்டு படமாக்கினார் மிஷ்கின்.

அதுமட்டுமல்ல முகமூடி படப்பிடிப்பில் பூஜா ஹெக்டேவை கடுமையாக திட்டி அவமானப்படுத்தினார்.

அதனால் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியத்தோடு போனார் பூஜா ஹெக்டே.

ஹிந்தியில் ரித்திக் ரோஷன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படம் முடிந்ததும் பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படமும் தெலுங்கு ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

மிஷ்கினால் டார்ச்சர் செய்யப்பட்டதால் இனி தமிழ்ப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் பூஜா ஹெக்டே இன்னமும் உறுதியாக இருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better