Search
Monday 23 April 2018
  • :
  • :

இரண்டாவது முறையாக சிக்கினார் இயக்குநர் ஆர்.கண்ணன்

கௌதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’ படத்தை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டார் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர். கண்ணன்.

இவன் தந்திரன் ரிலீஸ் செய்யப்பட்ட நான்காவது நாளே ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது.

அதனால் கண்ணனுக்கு சில கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இவன் தந்திரன் படத்தைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்து வரும் படம் ‘பூமராங்’.

அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மேகா ஆகாஷ், உபன் பட்டேல், ‘மேயாத மான்’ படப் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 முதல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஆர்.கண்ணன்.

15 நாட்களில் படத்தை முடித்துவிட திட்டமிட்ட கண்ணன் தற்போது ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் அதர்வாவின் கால்ஷீட் மறுபடி கிடைக்க 3 மாதங்களாகும் என்று தெரிவித்ததோடு, தனக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படவில்லை.

எனவே தயாரிப்பாளர் சங்கத்தினால் மீண்டும் நஷ்டத்தை சந்திக்கும்நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார் ஆர்.கண்ணன்.

அய்யோ பாவம்…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better