Search
Tuesday 17 July 2018
  • :
  • :

கோபி நயினார் அடுத்து இயக்கும் படம்…

கோபி நயினார் அடுத்து இயக்கும் படம்…

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்த ‘அறம்’ மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

‘அறம்’ படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவிருக்கிறார்.

அந்த படத்திலும் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

இன்னொரு பக்கம், சித்தார்த் நடிப்பில் கோபி நயினார் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

அந்த படம் வட சென்னை பின்னணியில், குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்றும், படத்தின் பெயர் கருப்பர் நகரம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இந்த தகவல்கள் குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கோபி நயினார் அடுத்து இயக்கும் படத்தில் சித்தார்த் நடிக்கவில்லை என்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார் என்ற தகவல் படத்துறையில் உலா வநத்து.

மேற்கணட் தகவலுக்கு மாறாக, கோபி நயினார் இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார் என்ற தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் பின்வாங்கியது ஏன்?

இந்த படம் வட சென்னை பின்னணியில் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்று சொல்லப்பட்டாலும், படத்தின் உள்ளடக்கத்தில் ஆளும்கட்சியை எரிச்சலடைய வைக்கும் பல அம்சங்கள் இருப்பதால்தான் கடைசிநேரத்தில் நடிக்க மறுத்துவிட்டனர் என்றும், படத்தில் பன்றிகள் மேய்க்கும் காட்சிகள் உள்ளதால் நடிக்க மறுத்துவிட்டனர் என்றும் தகவல் அடிபடுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better