Search
Sunday 23 September 2018
  • :
  • :

அடுத்தடுத்து நடிக்கும் தனுஷின் படங்கள்….

அடுத்தடுத்து நடிக்கும் தனுஷின் படங்கள்….

தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2, வட சென்னை ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

இவற்றில் மாரி-2 படத்தின் படப்பிடிப்பு மட்டுமே முழுமைபெற்றுள்ளது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு இன்னும் மிச்சமிருக்கிறது.

இந்நிலையில், அடுத்து 4 புதுப்படங்களில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

ராஜ்கிரணை ஹீரோவாக நடிக்க வைத்து தனுஷ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பவர் பாண்டி’. தான் இயக்கும் இரண்டாவது படத்தை ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறாராம் தனுஷ்.

அதன்பிறகு, பாலிவுட்டில் தன்னை அறிமுகப்படுத்திய ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தற்போது ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அந்தப் படத்துக்குப் பிறகே தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படங்கள் தவிர விஐபி-3 படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better