Search
Monday 22 October 2018
  • :
  • :

கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ் – இருவருக்கும் ஒரு ஒற்றுமை…

கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ் – இருவருக்கும் ஒரு ஒற்றுமை…

ஒரு படத்தை முடிக்காமலே அடுத்தப் படத்தை இயக்குவதும், அதை முடிக்காமல் மற்றொரு படத்தை இயக்குவதுதான் கௌதம் வாசுதேவ் மேனன் பாணி. அதனாலேயே, எந்தப் படத்தையும் குறிப்பிட்டகாலத்துக்குள் எடுத்து முடிக்கமாட்டார் என்ற கெட்டபெயரை பெற்றுள்ளார்.

இயக்குநர்களில் கௌதம் வாசுதேவ் மேனன் பெற்ற இந்த கெட்டபெயரைப்போலவே நடிகர்களில் தனுஷ் பெற்றுள்ளார்.

இவர் நடிக்கும் படங்கள் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவடைவதில்லை.

பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ் இந்த மூன்று படங்களையும் முடிக்காமல் வைத்திருக்கிறார்.

இதற்கிடையில், தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபக்கிர்’ படம் மே 30 அன்று வெளியாக இருக்கிறது. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் தயாராகியுள்ளது. தமிழிலும் டப் செய்து வெளியிட உள்ளனர்.

ஒரு நாவலைத்தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் காமெடி அட்வெஞ்சர் படமாம்.

இந்தப் படம் வெளியான பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்து வரும் ‘மாரி 2’ வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ‘வடசென்னை’ கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம் தனுஷ்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better