அக்டோபர் 5 ஆம் தேதி ஆண்தேவதை மற்றும் எழுமின் படங்கள் வெளியாவதாக இருந்தன.
கவுன்சிலின் அனுமதியில்லாமல் திடீரென நோட்டா படம் வெளியானதால் அந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் கிடைக்கவில்லை.
அதனால் ஆண்தேவதை, எழுமின் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டன.
அக்டோபர் 17-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’, 18-ம் தேதி லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டக்கோழி 2’, ‘திருப்பதிசாமி குடும்பம்’, ‘அண்டாவ காணோம்’, ‘எழுமீன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
அக்டோபர் 17, 18 அன்று வட சென்னை, சண்டக்கோழி-2 ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை வெளியிட்டால், மற்ற சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.
எனவே இருவரில் யாராவது ஒருவர் உங்களுடைய படத்தை தள்ளி வையுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு விஷால், தனுஷ் இரண்டு பேருமே மறுத்துவிட்டனர்.
விஷால் படத்தை தள்ளி வைக்கச் சொல்லுங்கள் என்று தனுஷும், தனுஷ் படத்தை தள்ளி வைக்கும்படி விஷாலும் முரண்டு பிடித்துள்ளனர்.
இவர்களின் பிடிவாதத்தினால் பாதிக்கப்பட்டது சின்ன படத்தயாரிப்பாளர்கள்தான்.