Search
Saturday 16 February 2019
  • :
  • :

தனுஷ் இயக்கும் படம்…. புதிய தகவல்…

தனுஷ் இயக்கும் படம்…. புதிய தகவல்…

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

அதோடு, இப்போது ரஜினி நடிப்பில் ‘காலா’ என்ற படத்தை தயாரித்தும் வருகிறார்.

வட சென்னை படத்தில் நடித்து முடித்த பிறகு மாரி-2 படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதை முடித்த பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தை முரளி ராமசாமியின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்கிரண் நடிப்பில் ‘பவர் பாண்டி’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்த தனுஷ் அதன் பிறகு நடிப்பிலும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் இப்போது மீண்டும் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்.

அப்படியானால் மாரி-2, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படம்?

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில்தான் முதலில் நடிக்கவிருந்தார் தனுஷ்.

அந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

மெர்சல் படம் தயாரித்த வகையில் நஷ்டமடைந்ததால் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தை ட்ராப் பண்ணிவிட்டனர்.

எனவே சின்ன பட்ஜெட்டில் தானே இயக்கி ஒரு படத்தை எடுத்து தருவதாக சொல்லியுள்ளாராம் தனுஷ்.

இந்த அடிப்படையிலேயே தனுஷ் இயக்குவதாக செய்திகள் வருகின்றன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better